1. செய்திகள்

News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை

Deiva Bindhiya
Deiva Bindhiya

News Update: Chance of rain tomorrow: Warning for fishermen

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ. 63 ஆயிரம் சம்பளம்

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் டெக்னீசியன் பிரிவில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணிக்கு தேர்வாகும் நபருக்கு குறைந்தபட்சம் ரூ.19,900மும், அதிகபட்சமாக ரூ.63 ஆயிரம் வரையிலும் மாத ஊதியம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறு, குறு நடுத்தர தொழில்கள் சார்ந்த திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர்

டெல்லி, விஞ்ஞான் பவனில் 'தொழில் முனைவு இந்தியா' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் சார்ந்த திட்டங்களை பிரதமர் இன்று துவக்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சமூக வலைத்தளத்தில் நடிகர் சூர்யாவிற்கு பாராட்டு

தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத் தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, The Academy விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! என சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார், முதலமைச்சர் மு.க ஸ்டாலின்

MK. Stalin Congratulate Actor Suriya

தமிழக விவசாயகள் பயன்பெறும் வகையில் ஐந்து நாட்களுக்கு வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சியை நடத்தும்.

தமிழக விவசாயிகள், பெண்கள், இறுதியாண்டு மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகம், TNAU, கோயம்புத்தூர், ஐந்து நாள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சியை நடத்துகிறது. விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைமுறைகள், தயாரிப்பு தேர்வு, ஆவணங்கள், தளவாடங்கள், சந்தைப்படுத்தல், ஆதாரம் மற்றும் விவசாய ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் அனைத்து முக்கிய பகுதிகளிலும், இப் பயிற்சி கவனம் செலுத்தும். கோயம்புத்தூரில் உள்ள வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குநரகத்தில் 2022 ஜூலை 4 முதல் 8ம் தேதி வரை இப் பயிற்சி நடைபெறும். இதற்கான முன்பதிவுகளுக்கான மின்அஞ்சல் [email protected] அல்லது [email protected] மூலமாக செய்துக்கொள்ளலாம், மேலும் தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட எண் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக 0422-6611310 அல்லது 9500476626 என்ற எண்களில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

தமிழக வானிலை அறிக்கை: நாளை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்றஉ மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

வங்கிக்கணக்கில் வந்த ரூ.1.42 கோடி சம்பளம்- தப்பியோடிய ஊழியர்!

அத்திப்பழம் சாகுபடி: முன்னோடி விவசாயியின் அனுபவம்!

English Summary: News Update: Chance of rain tomorrow: Warning for fishermen

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
OSZAR »